Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உதயநிதி மேல் பாய்ந்த புதிய வழக்கு - போலீஸ் அதிரடி

உதயநிதி  மேல் பாய்ந்த புதிய வழக்கு - போலீஸ் அதிரடி
உதயநிதி

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், சிறுவனை பேச வைத்த குற்றச்சாட்டின்பேரில், எதிர்கட்சித்தலைவர் உதயநிதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், சிறுவனை பேச வைத்த குற்றச்சாட்டின்பேரில், எதிர்கட்சித்தலைவர் உதயநிதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து கடந்த 3-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பிரச்சார வாகனத்தில் ஏற்றப்பட்ட சிறுவன் ஒருவரிடம் மைக் வழங்கப்பட்டது. அந்த சிறுவன் முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியதுடன், திமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் பிரச்சாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், தேர்தல் விதிகளை மீறி சிறுவனைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


முந்தைய செய்தி
அக்டோபரில் பங்குச் சந்தை இப்படித்தான்.. நோட் பண்ணுங்க
அடுத்த செய்தி
ஐடி நிறுனங்களின் காலாண்டு முடிவு - எப்போது வெளியீடு?

தொடர்புடைய செய்திகள்